எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு, எல்லா தொடுஉணர்வுகளையும் நீக்கிவிட்டு, எல்லா மணங்களையும் மறைத்துவிட்டு, எந்த ஒலியுமில்லாத இடத்தில் தனித்திருப்பின் நாம் இல்லாமலாகி விடுவோமா? இல்லை. நாம் இருந்துகொண்டிருக்கிறோம். நமது எண்ணங்கள் நதிப்பிரவாகமென சென்றபடி உள்ளன. அதன் பெயர் திருஷ்ணை. திருஷ்ணை தியானத்தின்போது தங்கிவிடுவதைக் காண்கிறோம். ஆழ்ந்த தியானத்தில் அதன் பரப்பில் அலைகள் ஓய்கின்றன. அடித்தளமென ஆழ்மனதை அங்கு காண்கிறோம். அதைத் தொடப் போனால் அது ஒரு தோற்றமே என்றும் அந்தத் தளம் ஒரு வானவெளி என்றும் அறிகிறோம். அந்த வானவெளியை நோக்கிப் பறந்தால் வானமென்பது இன்மை என்றறிகிறோம். இன்மையை உணரும்தோறும் அதன்
...more