உள்ளும் புறமும் பிரபஞ்சங்கள் ஒன்றை ஒன்று பிரதிலித்தபடி இடைவெளியின்றி மாறிக்கொண்டிருக்கின்றன. வெளியே பரமாணுக்களும் அவற்றின் குணபரியாயங்களும் நீர் நிழல் சித்திரம் போல மாறியபடியே உள்ளன. நாம் காணும்போது காணும் தருணத்திற்கும் அவற்றின் இருப்புநிலைக்கும் இடையே ஒரு துளியினும் துளியான கால இடைவெளி உள்ளது. அவ்விடைவெளியில் அவை மாறிவிடுகின்றன. எனவே காணும்போது அவை காணப்படும் நிலையில் இல்லை. ஆகவே பிரபஞ்ச இருப்பு என்பதை நாம் அனுமானிக்க மட்டுமே முடியும்.”