நமக்கு ஒரு பொருள் என்பது அதன் அனுபவமேயாகும். தீ என்பது ஒளியும் வெம்மையும் இணைந்த ஓர் இருப்பு அல்லவா? பௌத்த மரபுப்படி நாம் நெருப்பை அறிய நான்குவித பிரத்யங்கள் தேவையாகின்றன. முதலில் பார்க்கப்படும் பொருள். நெருப்பு தேவை. இதை ஆலம்பன பிரத்யம் எனலாம். நெருப்பை உணரும் புலன்களான கண்ணும் மெய்யும் அடுத்த தேவை. இது ஆதிபத்ய பிரத்யம். கண்ணுக்கும் மெய்க்கும் உதவக்கூடிய பிற விஷயங்கள், ஒளி முதலியவை சககாரி பிரத்யம் எனப்படுகின்றன. இறுதியாக ஏற்கெனவே நெருப்பை நேரடியாக அறிந்த அனுபவமும் பிறர் கூறக்கேட்டு நம் மனத்தில் உள்ள அனுபவமும் அடங்கிய முன்னறிவும் தேவை. இதை சமாந்தர பூர்வபத்யம் என்கிறோம். இந்நான்கும் ஒரு
...more