ஒன்றேயான அந்த சத் வடிவம் என்ன? எப்படி இருந்தது? எப்படி உள்ளது? எப்படி இருக்கும்? அது அங்கில்லை. அது இங்கும் இல்லை. அது எங்கும் இல்லை. அது எங்குமுள்ளது. அது மேல்கீழற்றது. உள்வெளி அற்றது. அது வடிவமற்றது. அனைத்து வடிவங்களுமானது. அது குணங்களற்றது. அனைத்து குணங்களுமானது. அது கர்மங்களற்றது. அத்தனை கர்மங்களுமானது. அது அத்தனை சொற்களுக்கும் அப்பாற்பட்டது. சான்றோர்களே, அதை நாம் நெருப்பென்போம்; அது நெருப்பு. நீரென்போம்; அது நீர். அது என்போம்; அது அது. இது என்போம்; அது இது. இங்கு நாம் அதை விஷ்ணு என்கிறோம்; அது விஷ்ணு.”