ஆதியான இருப்பு தன்னையே பிரபஞ்ச வடிவமாக ஆக்குகிறது என்ற வாதம் தவறானது. ஆதிவடிவான பதி எல்லையற்றவன். எட்டு குணங்களும் எட்டு இன்மைகளும் உடையவன். இந்நிர்ணயங்களுக்கு அப்பாற்பட்டவன். பதியே பருவுடலாகப் பிரபஞ்சமானான் எனில், பிரபஞ்சத்தில் காம குரோத மோகமெனும் மும்மலங்களும் அவனே என்று ஆகும். அது தவறு.”