“பதியின் பாகம் சக்தி. அது அரூப சக்தியாக உள்ளது. அது ஸ்வரூப சக்தியாக மாறும்கணம் பிரபஞ்ச லீலை தொடங்குகிறது. ஸ்வரூப சக்தியே தூலமாகத் தோன்றி பிரபஞ்ச மாயையை உருவாக்குகிறது. பிரபஞ்சம் சக்தி மயம். சக்தி சிவமயம். ஆகவே சர்வம் சிவமயம். ஆனால் சக்தி சிவமல்ல. அதில் ஒரு துளி மட்டுமே. பிரபஞ்சம் சிவமல்ல. ஆடும் சிவனின் கழலோசையில் எழும் ஒரு நாதம் மட்டுமே இப்பிரபஞ்சம். அந்த நாதம் சிவத்தை அடைய ஒரு வழிகாட்டி மட்டுமே.”