“நீரின் நீர்த்தன்மை அதன் விசேஷத் தன்மை ஆகும். நீரையும் மண்ணையும் தொட முடியும். ஆகவே தொடுகை நீரின் சாமான்ய தன்மை. இருவிசேஷத் தன்மைகள் இரண்டற கலந்த நிலையே பொருள்களின் சமவாயத்தன்மை ஆகும். உதாரணம் நீரின் கரைக்கும் தன்மையும், உப்பின் கரையும் தன்மையும் இணைந்து உப்புநீர் உருவாகிறது என்பது. பொருள்களின் தனி, பொது, இணைவு நிலைகள் வழியாகவே இப்பிரபஞ்சம் உருவாகியுள்ளது.”