“அழிவற்ற ஆத்மா என்ற கருத்தின் விரிவாக்கமே அது. ஆத்மா அழிவற்றது என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. ஆத்மாவின் அழிவை ஏற்றுக்கொண்டால் மனிதவாழ்வு மரணத்துடன் முடிந்துவிடக் கூடியதாகி விடும். அப்போது மனிதன் இந்தப் பூமியில் சேர்த்துவைத்துள்ள அனைத்தும் பயனற்றதாகி விடும். கல்வியும் செல்வமும் கீர்த்தியும் அர்த்தமற்ற மாயையாகிவிடும். அவற்றை இழக்க மனமில்லாத லௌகீகவாதிகள் அவை முடிவின்றி தங்களைத் தொடர்ந்து வருமென்று எண்ண விரும்பினார்கள். எனவே உடல் அழிந்தாலும், அழியாது வாழும் மானுட சாரம் ஒன்றைக் கற்பனைசெய்தார்கள். அந்தச் சாரத்தை பிரபஞ்சத்தை நிர்ணயிக்கும் முழுமுதல் சாராம்சத்தின் துளியாக உருவகம் செய்தார்கள். உலக
...more