கர்ப்பம் என்பது என்ன? பார்த்திவப் பரமாணு தன்னுள் கருத்துவடிவில் இருக்கும் மானுட உடலை பருவடிவமாக ஆக்குவது தானே? அது தேவையான உதிரத்தையும் சதையையும் அன்னை உடலிலிருந்து பெற்றுக்கொள்கிறது. முதலில் மந்திரவடிவமாக இறைவனை வைதிகர்கள் உருவகிக்கிறார்கள். பிறகு மூலவிக்கிரகமாகப் பிரதிஷ்டை செய்கிறார்கள். பிறகு அதைச் சுற்றி கருவறை எழுகிறது. பிறகு பிரகாரங்கள், மண்டபங்கள், விமானங்கள், உபகிருகங்கள், மகாமரியாதங்கள், பாஹ்யாகாரங்களுடன் பெரும் ஆலயம் எழுகிறது. பார்த்திவப் பரமாணுப் பொருள் முதலில் அன்னையின் உதிரத்தையும் பிறகு மண்ணின் அமுதத்தையும் உறிஞ்சி வளர்கிறது. ஒரு தருணத்தில் அது உடல்கொண்டுவந்த நோக்கம்
...more