“வார்த்தையின் பிறப்பும் மானுடன் பிறப்பும் ஒன்றுதான். உண்மையில் அருவம் உருவமாக மாறும் ஏழு படிகள்தாம் இவை. வைகரிமொழி ஜாகரத்துடனும் அன்னமய உலகுடனும் தொடர்புள்ளது. அதுவே மனிதனின் இயல்பான நிலை. மத்யமமொழி பிராணமய கோசத்துடனும் ஸ்வப்ன நிலையுடனும் தொடர்புடையது. பஸ்யந்திமொழி சுஷûப்தி எனும் ஆழ்மனதின் மொழி, மனோமய கோசத்தின் உலகைச் சார்ந்தது. பராமொழி சுத்த மனோமய கோசத்தில் துரியநிலையில் செயல்படுகிறது. சம்வர்த்திகம் நிர்வாண நிலையை அடைந்த ஞானியின் மனதில் உள்ள மொழி. அவர் சூனியமய கோசத்தில் வாழ்கிறார். சாக்ஷிகி ஆனந்தமய உலகில் பரநிர்வாண நிலையில் உள்ள ஜீவன் முக்தனின் அந்தரங்க பாஷை. சம்ப்ரதீகம் தேவருலகில் உள்ளது.
...more