பிரபஞ்சம் பதார்த்தங்களால் ஆனது. அவை திரவியம், குணம், கருமம், சாமானியம், விசேஷம், சமவாயம் எனப்படும். இப்பொருண்மைக் குணங்களே பூலோகத்தின் இயல்பைத் தீர்மானிக்கின்றன. இவற்றின் அடிப்படையானது திரவியம் என்ற பொருள்குணம். நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு, காலம், திசை, ஆத்மா, மனம் எனும் ஒன்பது திரவியங்களின் கூட்டையே நாம் பொருள்வய உலகமாக அறிகிறோம். உருவம், சுவை, மணம், தொடுகை, பரிமாணம், பருண்மை, சுகம், துக்கம், ஆசை, வெறுப்பு, முயற்சி, எதிர்மை முதலிய பதினேழு வகைக் குணங்களையே நாம் அனுபவித்தறிகிறோம். எழுதல், விழுதல், சுருங்குதல், விரிதல், நகர்தல் என்னும் ஐவகைக் கருமங்களில் பொருள்கள் ஈடுபடுவதன் மூலமே
...more