சுகதுக்க நன்மை தீமைகள் எனும் இருபாற் பிரிவினைகள் உண்மையில் இல்லாதவை. நாம் கொள்ளும் பிரமைகள் அவை. நேற்றைய துக்கம் ஏன் இன்று இன்பம் தருகிறது? எல்லா சுகங்களின் தருணங்களிலும் உள்ளாழத்தில் ஏன் மனம் துயரம் கொள்கிறது? எல்லாப் பிரபஞ்சக் காட்சியும் பொய்யே. மனதின் இருபாற்பட்ட நிலையே பிரபஞ்சத்தின் இருபாற்பட்ட நிலையாகக் காட்சி தருகிறது. இது பிரபஞ்சம் அசத் எனும்போதுதான் நிறுவப்படுகிறது.