“பசு எனும் மானுட ஆத்மா. பாசம் எனும் கயிற்றால் அது பிரபஞ்சத்துடன் கட்டிப்போடப்பட்டுள்ளது. இச்சை, ஞானம், கருமம் எனும் மூன்று தன்மைகள் உடையது பசு. அவித்யை, கருமம், மாயை என்னும் மும்மலங்கள் அதற்குப் பாசமாக உள்ளன. பசுவின் அவித்யை என்ற அறியாமையில் இருந்து கருமம் பிறக்கிறது. கருமத்தில் இருந்து கருமப் பயன், கரும வினை என்ற இருநிலைகளுக்கு இடையே ஊசலாடும் மாயை பிறக்கிறது. தூய சிவஞானம் பாசமறுத்து, பசுவை விடுதலைசெய்கிறது. சக்தி ஸ்வரூபமாக பிரபஞ்சத்தைப் பார்ப்பதே சிவஞானம். ஸ்வரூப சக்தியிலிருந்து அரூப சக்தியைக் காண்பதும், அரூப சக்தியில் சிவ ஒளியைக் கண்டு கரைவதும்தான் வீடுபேறு.