“தன்னைச் சத்தாக எண்ணுவதே அஞ்ஞானம் என்பது. தன் அகத்தை நோக்கி அவன் கண்கள் திரும்பட்டும். யோகம் மூலம் அவன் பிராணவடிவைக் காணலாம். மனனம் மூலம் கருத்துவடிவை அடையலாம். தியானம் மூலம் மனோவடிவை அறியலாம். மோனம் மூலம் சூனியவடிவை அடையலாம். முக்தி மூலம் சச்சிதானந்தரூபம் ஆகலாம். இதுவே இங்குள்ள மெய்மை வழி. இதை விடுத்து அன்னமய உலகின் விசித்திரங்களில் ஆழ்பவன் குழந்தை போல. உலகம் தீராத விளையாட்டுக் களஞ்சியம் அவனுக்கு”