“ஜடப் பிரபஞ்சம் இருக்கிறது என்றே வைபாஷிக மதம் கருதுகிறது. அனைத்துமே இருக்கின்றன. நாங்கள் இதை சர்வாஸ்திவாதம் என்கிறோம். ஆனால் அனைத்தும் அவற்றின் மாறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே காணக்கிடைக்கின்றன. ஆகவே நாம் காணும் ஜடப் பிரபஞ்சம் உண்மையல்ல. இந்த மாற்றத்திற்கு ஒவ்வொன்றிலும் ஒரு நியதியைக் காண்கிறோம். ஒவ்வொரு நியதியும் இன்னொரு நியதியுடன் இணைந்திருப்பதைக் காண்கிறோம். நியதிகள் இணைந்து பெரும் நியதிகள் உருவாவதையும் காண்கிறோம். மீமாம்சகரே, நியதியை நாங்கள் தர்மம் என்கிறோம். பால் தயிராவது அதன் தர்மம். பசு பால் தருவது அதன் தர்மம். தர்மங்களெல்லாம் இணைந்த மகாதர்மமே பௌத்தம் அறிந்த ஆதிப்பெரும்சக்தி. தர்மம்
...more