“மரணம் நிகழ்வதெப்படி என்பதை ஆயுர்வேதம் விளக்குகிறது. ஜீவன் சூட்சுமவடிவமாக இதயத்தில் இருந்து பிரம்மதுளைக்கு வந்து சற்று தயங்கி, அன்னமய கோசத்தில் துடிக்கிறது. பிறகு விடைபெற்று காற்றில் எழுகிறது. சில கணங்கள் பிராணமய உலகில் தங்குகிறது. அங்கிருந்து ஸுவர்லோகத்திற்குப் பயணமாகிறது. அன்னமய கோசத்தில் பிராணன் கடைசியாகத் தங்கிநிற்கும் கணங்களில் எட்டுவிதமான லட்சணங்கள் ஏற்படுகின்றன. ஐந்துவகை சுவாசங்கள் பிரிகின்றன. மூன்றுவகை நாடிகள் மாறிமாறித் துடிக்கின்றன. பின்பு அனைத்தும் அடங்கிவிடுகின்றன.