“அஜிதர் காலத்தை ஒரு வளைகோடாக உருவகித்தார். அதை பிறகு வந்த தர்மஞானிகள் ஒரு சக்கரமாகக் கற்பிதம் செய்தார்கள். ஆகவே காலத்தை வரைசீலையாகக் கொண்ட பிற அனைத்தும் சக்கரவடிவ இயக்கம் கொண்டவையே. காலசக்கரத்தை மகாதர்மத்தின் தூலவடிவமாக வழிபடுகிறவர்கள் தங்களை சக்ராயன பௌத்தர்கள் என்கிறார்கள்.”