“பிரபஞ்ச இயக்கம் மூன்று குணங்களின் இயல்புகளைக் காட்டுகிறது. சத்வ, ரஜோ, தமோ குணங்கள். இவை ஆதிப்பிரகிருதியிலும் இருந்தே ஆகவேண்டும். காரணம் உபதானகாரணாத் வாதம்தான். இந்த இயக்கமுள்ள இயற்கையில் இக்குணங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து பிணைந்து கோடி உருவங்களையும் செயல்களையும் உருவாக்கியபடி உள்ளன. அப்படியானால் இயக்கமற்ற ஆதிஇயற்கையில் இவை பரஸ்பரம் பூர்த்திசெய்தபடி, சமநிலையில் இருந்திருக்க வேண்டும். அந்தச் சமநிலையே அதை மகாமௌனத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அனாதி காலத்தில் அது அசைவற்ற பெரும் இருப்பாக உறைந்திருக்க வேண்டும். என்றோ, ஏதோ ஒரு கணத்தில், ஒரு முதல் தொடக்கம் நிகழ்ந்திருக்கலாம். அதன்மூலம் முக்குணங்களின்
...more