இடையில் ஒட்டியாணம். அதிலிருந்து தொடை வரை நீண்டு தொங்கும் பொன்தூக்குகள். தொடையில் குறங்கு செறி. மடியில் விரிசிகை. காலில் நூபுரம். அதற்கு மேல் நூபுரச் சிறகுகள், பத்து கால்விரல்களிலும் பொன்மெட்டிகளும் பீலிகளும் கைகளில் நெளிவளை, நூல்வளை, தொடிவளை, மலர்வளை, சூடகம் என்று அடுக்கினாள். முழங்கை வரை நெருங்கிய அவற்றின் இருபக்கமும் கனத்த காப்புகளை மாட்டி அவற்றை இறுக்கினாள். பவளம் பதித்த தோள்வளைகள். விரல்கள் அனைத்திலும் செந்நிற வைரங்கள் பதித்த மோதிரங்கள். மணிக்கட்டின் மீது பாணிபுஷ்பங்கள். காது மடல்களில் நீலநிற வைடூரியத்துடன் ஒளிர்ந்த மகரத்தோடு. மேல்காதில் நீர்நிற வைரங்கள் பதிக்கப்பட்ட காதுமலர். மடல்
...more