இருவகை பிரபஞ்சங்கள். ஒன்று நாம் சாதாரணமாக அறியும் புறப்பிரபஞ்சம். இன்னொன்று அதற்கு ஆதாரமான அகப்பிரபஞ்சம். இரண்டும் பரஸ்பரம் சார்ந்தே உள்ளன. குணகர்ம பரியாயங்களும் ஐம்புலன்களும் அடங்கியது வெளிப்பிரபஞ்சம். உருவம், அறிதல், வேதனை, தொகுப்பு, சுத்திகரிப்பு என்ற ஐந்து ஸ்கந்தங்களினால் ஆனது அகப்பிரபஞ்சம். சித்தம், சித்தி என்ற இருநிலைகளில் உள்பிரபஞ்சம் உள்ளது.