பிரபஞ்சம் நம் கண்முன் உள்ளது. எனவே இதற்கு நாம் காரணம் தேடுகிறோம். இதற்கு, காரணம்கொண்டது; சத்காரணாத் என்று பெயர் சூட்டுகிறோம். இதன் தன்மை இதன் காரணத்தின் தன்மையேயாகும். பாலின் குணமே தயிரின் குணம் அல்லவா? தண்ணீரோ வாயுவோ தயிராகாதல்லவா? காரியம் காரணத்தின் இயல்புகளையே தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதை நாங்கள் உபதான காரணம் என்கிறோம். எனவே பிரபஞ்சத்தின் காரணமாக, இதன் தன்மைகளை எல்லாம் தீர்மானித்தபடி இருந்த காரணம் எது? அந்தக் காரணத்தின் காரணம் எது? இவ்வாறு அவியக்தத்தின் அவியக்தமாக உள்ளுறைந்தபடியே போகும் அந்த ரகசியம் என்ன? மறைநிலையான அதுவே பிரபஞ்சத்தின் மூலகாரணமாக இருக்க இயலும். அதே போல இந்தப் பிரபஞ்சம்
...more