“இரண்டு வஸ்துக்களோ, இருப்புகளோ ஒன்றை ஒன்று முற்றிலும் சார்ந்துள்ளன என்றால் அவற்றில் ஒன்று பொருண்மையற்றது அல்லது இல்லாதது என்று நிறுவினால் போதும்; இன்னொன்றும் இல்லாததேயாகும். எதுவுமே நிறைநிலையில் இல்லை என்கிறார் புத்தர். ஒரு பொருள் என்று நாம் கூறுவது அது நிறைநிலையில் நிற்கும் தருணத்தையே. சூரிய ஒளியை நாம் பொருள் என்பதில்லை. அது நிறைநிலையில் நில்லாததை நாம் ஊன விழிகளினால் காண்பதனால்தான் அதை அப்படிக் கூறுகிறோம். ஆனால் சூரிய ஒளிக்கும் பிற பொருள் தோற்றங்களுக்கும் உண்மையில் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை என்பதே பிரதீத சமுத்பாதம் மூலம் நிறுவப்படும் உண்மை. மூன்று பிரமாணங்களும்; நிலையின்மை, நிறைவின்மை,
...more