“ஆயுர்வேதம் மரணத்தை மிகச் சிக்கலான ஒரு நிகழ்வாகவே வகுக்கிறது. எளிமையாகக் கூறப்போனால் இப்படி விளக்கலாம். பிராணமய கோசத்தின் மையமான பார்த்திவப் பரமாணு, குண்டலினியின் உள்ளே தூங்குகிறது. பிறப்பிற்கு முன்பு, அன்னமய வடிவம் உருவாவதற்கு முன்பு, அது பிராணவடிவில் இருந்தது. பின்பு அது பருவடிவம் கொண்டது. உடனே அதற்கு ஞானவடிவமும் உருவாகி விடுகிறது. பார்த்திவப் பரமாணு வளரவளர, உடலும் ஞானமும் வளர்கின்றன. உயிரின் உடலியல்புகளும் ஞானஇயல்புகளும் பார்த்திவப் பரமாணுவிலிருந்தே உருவாகி வருகின்றன. அந்தப் பரமாணுவின் உள்ளேதான் ஜீவனின் அடிப்படையான யந்திரவடிவம் உள்ளது. அது அங்கு சூட்சுமவடிவில் உள்ளது. விதையின் கருவிற்குள்
...more