பெயர். வேத கர்மங்களுக்குரிய மொழி வைதிகம். தியானத்தற்குரிய தூய மொழி த்வனி. இம்மூன்றிலிருந்து ஏழு வேறு பிரிவுகள், சம்ரதீகம், சாக்ஷிகி, சம்வர்த்திகம், பரா, பஸ்யந்தி, மத்யமம், வைகரி என ஏழு. முதல் மூன்றும் த்வனியில் அடங்கியவை. முக்திநிலையை நெருங்கும் மனதிலும் உயர்ந்த தியான நிலையிலும் மட்டும் கூடுபவை. மனிதப் பிரக்ஞை ஏழு நிலைகளில் உள்ளது. சூனியாதீதம், சூன்யம், நிர்வாணம், துரியம், சுஷûப்தி, ஸ்வப்னம், ஜாகரம் எனும் ஏழு நிலைகள். தூய சங்கீத வடிவில் தேவருலகில் உள்ள வார்த்தை, தியானம் முதிர்ந்த ஞானியின் சூனிய நிலை மனதில் சம்ரதீகமாக இறங்கி வருகிறது. மெல்லப் படியிறங்கி, கடைசியில் விழிப்புநிலை மனமான ஜாகரத்தில்
...more