சுயமையப் பார்வையே அகங்காரம். அதிலிருந்து புத்தி மயக்கம். புத்தி மயக்கத்தில் இருந்து அறியாமை. அறியாமையிலிருந்து பாவம். பாவத்திலிருந்து துக்கம். துக்கத்திலிருந்து மீள எங்கள் அருகர்கள் தூய தரிசனம், தூய ஞானம், தூய வாழ்வு என்று மூன்று அடிப்படைகளை வகுத்தளித்தனர். அகங்காரத்தைக் கொன்றாலொழிய தூய பார்வை இல்லை. அகங்காரத்தைக் கொல்ல புலன்களை முழுமையாக நம்பி ஏற்பதை நிறுத்தவேண்டும். புலன்கள் நாம் பூமியில் வாழ்வதற்காக நமக்குத் தரப்பட்டவை. மெய்ஞான மார்க்கத்திற்கு அவை வழிகாட்டாது. தடைகளுமாகும். ஐந்து மகாவிரதங்கள் மூலம் ஆத்மாவையே புலன் ஆக்கலாம். அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், அபரிகிரகம், பிரம்மசரியம் என்பவை
...more