“யோகாசாரம் புத்தரின் மூன்று உருவங்களை வகுக்கிறது. நிர்மாண காயம் என்ற உலகியல் தோற்றமே நீங்கள் குறிப்பிடும் புத்தவடிவம். சாமானிய தளத்தில் புழங்கும் மனம் இங்கு வாழ்ந்து ஞானத்தை உபதேசித்து மறைந்த ததாகதரை நினைவுகூறும் பொருட்டு அதை வணங்குவது நியாயமேயாகும். ஹீனயானிகள் அதைத் தியானத்தின் வெளிவடிவமாக வணங்குகிறார்கள். சம்போக காயம் என்ற பேரின்ப மனோமய உடலை வைபாஷிகர்கள் வணங்குகிறார்கள். புத்தர் பற்றிய கதைகளாகவும் நினைவுகளாகவும் எஞ்சுவது இந்த உடலே. முதல் உடல் மண்ணில் அழிந்தது. இரண்டாவது உடலைக் காலம் அழிக்கும். பின்பு எஞ்சுவது என்றும் இருக்கும் அவருடைய தர்மகாயம். அதைப் பேரண்டத் தோற்றம் என்றே நாங்கள்
...more