“ஞானியும் ஞானமும் ஞானப் பொருளும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்று இல்லையேல் பிறிது இல்லை. இவற்றில் எது ஒன்று உண்மையில் இல்லை என்று நிறுவப்பட்டாலும், பிறவும் இல்லை என்றாகிவிடும். அறியும் பொருள் இல்லை. ஏனெனில், உலகம் ஜடப்பொருள்களின் தொகுப்பு அல்ல. நிகழ்வுகளின் தொகுப்புதான் அது. நிகழ்ச்சிகள் காண்பவனின் அறிவின் விளைவுகள். அந்த அறிவு முன்னிகழ்ச்சிகள் என்ற நினைவுத்தொகுப்பிலிருந்து பிறப்பது. பொருளும் அறிவும் இல்லையேல் அறிபவனும் இல்லை. எனவே இம்மூன்றும் இல்லை.