பௌத்தம் பிரத்யட்சம், அனுமானம் இரண்டை மட்டுமே பிரமாணமாகக் கொள்கிறது அன்றாட அறிதலுக்கு அப்பாற்பட்ட ஒன்றை அறிவதற்கான ஆதாரமே பிரமாணமாகும். திக்நாத மகாபாதரின் பிரமாண சமுச்சயம் இதை விரிவாக இவ்வாறு விளக்குகிறது. நேரிடையாகப் பெறும் அறிவான பிரத்யட்ச ஞானம் நான்குவகை. புலன் ஞானம், மனோ ஞானம், தன்னுணர்வு ஞானம், யோக ஞானம். அனுமானப் பிரமாணமோ தன்னல அனுமானம், பொதுநல அனுமானம் என்று இரண்டு வகை. பௌத்தம் ஒருபோதும் மூலநூல்களை ஏற்பதில்லை.