“ஆதிகாரணம் அவியக்தம் ஆக உள்ளது. வியக்தத்தை அறிய புலன்களின் அறிதலாகிய வியவகார ஞானம் உதவும். அவியக்தத்தை அறிய அனுமானமே வழியாகும். நமது அனுமானத்திற்கு ஆதாரமாக உள்ளது இந்தப் பிரபஞ்சமேயாகும். கையிலுள்ளது மோர். அதன் காரணமாக உள்ள பாலை மோரை வைத்தே ஊகிக்க வேண்டும். இது சத். ஆகவே ஆதிகாரணமும் சத்தேதான். இது மாறிக் கொண்டிருப்பது. எனவே, அதுவும் மாறும் தன்மை உடையது. அதை நாங்கள் ஆதிப்பிரகிருதி என்கிறோம்.