வைசேஷிகம் இவ்வடிப்படைகளை முன்வைத்து ஆராய்கிறது. நீரின் நீர்த்தன்மை என்பது அதை ருசிபார்க்கும் ஆத்மாவினால் உண்டுபண்ணப்படும் ஒரு பொய்த்தோற்றமல்ல. நீர் நீர்த்துளிகளால் ஆனது. ஆகச்சிறிய துளியை நாங்கள் அணு என்கிறோம். அதன் தனித்தன்மையே நீர்த்தன்மை என்பது. அது ஒரு திரவியம். பூமியின் அத்தனை பருப்பொருள்களும் அவற்றின் பரமாணுக்களினால் ஆனவையோகும். அணுக்களின் தன்மையே அவற்றின் தன்மை. பொருள்களை அவற்றின் பொதுத்தன்மை தற்காலிகமாக இணைக்கிறது. இணைவுத்தன்மை நிரந்தரமாக இணைக்கிறது. இணைவு, பிரிவு இவற்றின் மூலம் பிரபஞ்சம் உற்பத்தியாகிறது. உங்கள் கேள்விக்கு வைசேஷிக மரபின் பதில் இதுதான். ஒரு திரவியத்தை இன்னொரு திரவியம்
...more