பூமி மீது நெருப்பைப் போல அழகிய வேறொன்று இல்லை. அதைப் போல பயங்கரமும் வேறு இல்லை. ஒவ்வொரு கணமும் அதன் வடிவம் மாறுகிறது. நிறம் மாறுகிறது. எப்படி கைகளால் வானை எட்டிப் பிடிக்க முயல்கிறது! ஆனால் அகல்விளக்கில் ஏற்றி வைத்தால் அமைதியாக இருக்கிறது. எடுத்து நகையில் பதிக்கலாம் போல.