முதன்முதலாக ததாகதர் சம்மாதிட்டி என்கிறார். நற்காட்சி. பிரபஞ்சத்தை நன்கு பார் என்கிறார். மனம் அலைபாயும்போது பார்ப்பது பார்வையல்ல. நோயுற்றிருக்கும்போது பார்ப்பது பார்வையல்ல. ஆசையுடன் பார்ப்பதும் வியப்புடன் பார்ப்பதும் அச்சத்துடன் பார்ப்பதும் பார்வையல்ல. பார்வை என்று ததாகதர் கூறுவது தூய பார்வை. தூய உடலின்றி தூய பார்வையே சாத்தியமல்ல. தூய உடலே அனைத்திற்கும் தொடக்கம்.