“மூல இயற்கையைப் போலவே அவனும் முடிவற்றவன், குணமற்றவன். ஆனால் காரியமாக மாறாது, எப்போதும் காரணமாகவே எஞ்சுபவன். இயற்கையின்முன் அவன் வெறும் காட்சியாளன் மட்டுமே. எதிலும் பங்கேற்பதில்லை. அவன் பார்வையே மூலஇயற்கையை சலனப்பிரபஞ்சமாக ஆக்குகிறது. அவனுடைய முடிவற்ற பார்வைமுன் அது மாறி மாறிச் சுழல்கிறது.”