நதி ஓடிக்கொண்டேயிருக்கிறது. அதன்மீது பிம்பங்கள் நிலைத்திருப்பவை போலத் தோன்றுகின்றன. ஓடும் நதியை கணக்கில் கொள்ளாமல் அப்பிம்பங்களைப் பற்றிக் கூறப்படும் அபிப்பிராயங்களெல்லாம் தவறானவையே ஆகும். நாமும் நம்மைச் சுற்றி உள்ள அனைத்தும் பிரபஞ்சங்களும் அவற்றின் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு கணத்திலும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நாமறியும் எதுவும் எந்நிலையிலும் தங்கள் முழுமை நிலையில் இல்லை என்பதே அதற்குக் காரணம். ஏனெனில், எப்பொருளுக்கும் முழுமைநிலை என்ற ஒன்று இல்லை... இந்த முழுமையின்மையைப் புத்தர் துக்கம் என்ற ஆதாரச் சொல்லால் குறிப்பிட்டார். இவ்விரு அடிப்படைகளின்படி பார்த்தால் மாற்றமிமல்லாத நிறைநிலையாகிய ஆத்மா
...more