“மகாதர்மம் முடிவற்றது. அதிலிருந்து ஆலயவிஞ்ஞானம் எழுந்தது. ஆலயவிஞ்ஞானத்திலிருந்து மனோவிஞ்ஞானமும், அதிலிருந்து புலன்களும் உருவாயின. புலன்கள் குணகருமவிசேஷசமானசமவாயத் தன்மைகளை உருவாக்கின. அத்தன்மைகள் பொருள் எனும் நிகழ்விற்குக் காரணமாயின. மனோவிஞ்ஞானத்தில் குவியும் அனுபவங்களிலிருந்து காலமெனும் தோற்றம் உருவாயிற்று. நமது விவாதங்கள் அனைத்தும் மனோவிஞ்ஞானத்தில் நிகழும் சலனங்கள் மட்டுமேயாகும். மனோவிஞ்ஞானத்தை உள்ளடக்கிய ஆலயவிஞ்ஞானம் ஓர் அதீத நிலையில் அது கொள்ளும் அனுமானம். மகத்தான ஆதிதருமமோ அனைத்து செயல்பாடுகளிலிருந்தும் நாம் அடையும் இறுதி அனுமானம் மட்டுமே.”