“தண்ணீரே உள்ளது. தான் அதில் ஓர் உறுப்பே என மீன் அறியுமெனில், அதன் இருப்புத்துயர் மறைகிறது. தர்மமே ஒரே இருப்பு, அனைத்தும் அதன் தோற்றங்களே என்று அறிந்தவன் தானும் தர்மகாயம் அடைகிறான். அதுவே புத்தநிலை. அதை நாங்கள் மஞ்சுஸ்ரீ என்று கூறுகிறோம். புத்தருக்கு முன்னும் பின்னும் அனேக மஞ்சுஸ்ரீக்கள் உள்ளனர்; என்றும் இருப்பார்கள்.”