ததாகதர் போதிசத்துவ நிலைக்கு மனிதனை உயர்த்தும் வழிமுறையாக பத்து பிரக்ஞா பாரமிதைகளை வகுத்தார். தானம், சீலம், ஆசையின்மை, ஞானம், வீரியம், பொறுமை, வாய்மை, கட்டுப்பாடு, அன்பு, துறவு என்பவற்றில் நெறிப்படுத்தப்பட்ட மனம் வீடுபேறடையும் என்பார். அதற்கான மார்க்கமாக அவர் தந்த அஷ்டாங்க மார்க்கம் உள்ளது. நற்காட்சி, நல்லெண்ணம், நல்வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நல்முயற்சி, நற்பழக்கங்கள், நற்தியானம்.