என்னை நான் எப்படி அறிகிறேன்? என்னை அறியும் அதை எப்படி நான் அறிகிறேன்? எதனுடன் என்னை முடிவின்றி ஒப்பிடுகிறேன்? என்னை எது முடிவின்றி வகுக்கிறது? நான் அறியாதபோது அது என்னை அறிகிறதா? என்னை அறியாதபோது நான் அதை அறியமுடியுமா? நான் அதுவாக ஆனால் அது எங்கு போகும்? அதுவாக நான் ஆனபிறகு நான் என்ன ஆவேன்? என்னுடையவற்றை அது ஏன் வாங்கிக் கொள்கிறது? அதனுடையவற்றை நான் எப்படி என்னில் கண்டடைகிறேன்?