எண்ணங்கள். எண்ணங்கள். எண்ணங்களினாலானது மனம் என்றால் எண்ணங்களை எப்படிப் பார்க்க முடிகிறது? எண்ணங்கள் பரஸ்பரம் உணர்கின்றனவா? ஞானம் என்பது எதனால் அறியப்படுகிறது? ஞானத்தினாலா? ஞானமின்மையில் ஞானம் விழுந்து நிரம்புகிறதா? ஞானமின்மையை அறிவது எது? ஆம், எது இதையெல்லாம் அறிகிறது? சரணம். மூச்சு சீராக ஓடுகிறது. சில கணங்களுக்குள் மூச்சின் தாளத்துடன் எண்ணங்கள் இணைகின்றன. பிறகு அவை தங்களுக்குரிய தாளம் ஒன்றை மேற்கொள்கின்றன. ஒரு சொற்றொடர் மனதில் காரணமின்றியே ஒலிக்கிறது. அது பல்லவி போலப் படுகிறது. அதற்கு என்ன அர்த்தம். நான் அறியாத அர்த்தமா? அப்படியானால் நான் என் மனம் அல்லவா? சரணம். எண்ணங்கள், சொற்கள்... எவ்வளவு
...more