காலம் என்பது என்ன? ஒரு நீட்சியா? வட்டமா? பிரம்மாண்டமான சக்கரம் ஒன்று சுழல்கிறது. அதன் ஒவ்வொரு புள்ளியும் முடிவற்ற பயணத்தில் உள்ளது. மையப்புள்ளி தவிர. அது காலச்சக்கரம். சக்திசக்கரம். அனாதியான பிரபஞ்சச் சக்கரம். அந்த மையம், அங்கு அனாதியான காலம் உள்ளது. ஆனந்தமான காலம் உள்ளது. ஆகவே, அது அகாலம்.