“மகாபுராணப்படி ராஜவிமானம் மூன்று பகுதிகளைக் கொண்டது. கீழே மண்ணில் இருந்து எழுந்து, நம் கைகளுக்கு எட்டும் பகுதியை பிரித்விஹாரம் என்கிறார்கள். சூக்கும வடிவமாக வானில் இணைந்திருப்பது ஆகாயத்தாலான மஹாஹாரம். இரண்டையும் இணைப்பது ஒளியாலான தேஜோஹாரம். ஆகாய வடிவான மகாவிமானம் ஒலியால் மட்டுமே நம்முடன் தொடர்பு கொள்ளமுடியும் என்று ஐதீகங்கள் கூறுகின்றன.