பிருத்வி, ஜலம், வாயு, அக்னி எனும் நான்கு பூதங்களினாலான அத்தனை பொருள்களும் அவற்றுக்குரிய அணுக்களால் ஆனவையே. பரமாணுக்கள் பரஸ்பரம் சேர்ந்தபடி உள்ளன. பிரிந்தபடியும் உள்ளன. அவை சேர்ந்து உருவாகும் ஸ்கந்தங்கள் மேலும் சில ஸ்கந்தங்களுடன் கூடி முயங்கி, நால்வகைப் பொருள்களும் உருவாயின. அவை முயங்கி பேரியற்கை பிறந்தது.”