ஞானம் சூட்சும வடிவமானது. விளக்கங்களின்றி எளிய மனத்திற்கு அது எட்டாது. ஆகையால் மனு வேதங்களைத் தர்மத்தின் அடிப்படையிலும், பிரஹஸ்பதி பொருளின் அடிப்படையிலும், நந்தி காமத்தின் அடிப்படையிலும், பாதராயணர் மோட்சத்தின் அடிப்படையிலும், ஜைமினி சொர்க்கத்தின் அடிப்படையிலும், தன்வந்திரி சிகிச்சையின் அடிப்படையிலும் விளக்கினார். இவற்றில் ஜைமினியின் விளக்கமே ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை. பிரம்மத்தை ஷட்வேதாங்க அடிப்படையில் அறியவேண்டும் என்று முன்னோர் வகுத்தனர். அந்த ஆறு வேதாங்கங்கள் என்ன? சிக்ஷா, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் உண்டு அதற்குள்ள வேதம்.
...more