“ஞானிகளே முக்தி என்பது ஏழுவகை உடல்களைப் படிப்படியாக உதறுவதாகும். ஏழுவகை உடல்கள் தனக்கு இருப்பதாக தான் கொண்ட பிரமையை உதற ஆத்மா, தூய நிலைக்குத் திரும்புவதே முக்தி. ஏழு வகை பிரபஞ்சங்களை உதறி பிரம்மம் அவ்வாறு திரும்புவதுதான் மகாஊழி. பிரம்மத்தை நோக்கிய ஆத்மாவின் பயணமே வாழ்வு. பிரம்மமே சத். பிரபஞ்சமெல்லாம் அசத் என்ற மெய் மீண்டும் இங்கு வலியுறுத்தப்படுகிறது. ஓம் தத் சத்.”