பால் தயிரின் காரணம். பாலே தயிராகிறது. பாலின்றி தயிரில்லை. தயிர் ஆனபின் பால் இல்லை. ஆகவே, காரணமும் காரியமும் ஒன்றின் இருமுகங்களே ஆகும். எதுவுமில்லாமல் ஏதும் புதிதாகத் தோன்றுவதில்லை. பூரணமாக அழிவதும் இல்லை. நாம் அறியும் பிரபஞ்சம் தெளிவாகப் புலன்களுக்குச் சிக்குவது. இதை வியக்தம் என்கிறோம். இதன் காரணம் தெளிவற்றது. அதை நாங்கள் அவியக்தம் என்கிறோம்.”