அந்தப் புள்ளி அறிவுக்கும் அறியாமைக்கும் நடுவே ஏன் நகர்ந்துகொண்டிருக்கிறது? அறியாமை ஏன் முடிவின்றி அறிவுக்குள் பெய்கிறது அதனூடாக? என் அறிவு என்னும்போது எதை நான் என்கிறேன்? என் புலன்களுக்கும் மொழிக்கும் அப்பால் எனக்கென எஞ்சுவது என்ன? ஏன் இடைவிடாது என்னை நினைக்கிறேன்? ஏன் அனைத்தையும் என்னுள் இழுக்கிறேன்? ஏன் அனைத்தின்மீதும் என்னை நிரப்புகிறேன்? ஏன் சலிக்காமல் என்னை நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன்? ஏன் என் அறிவால் அனைத்தையும் ஆக்குகிறேன்? ஏன் அனைத்தையும் என் அறிவாக ஆக்குகிறேன்?