“பிரம்மாவின் ஒரு பகலை நாம் ஒரு கல்பம் என்கிறோம். ஆதித்ய புராணம் கல்பம் என்றால் என்ன என்பதை இப்படி விளக்குகிறது. கல் என்றால் பிறப்பு. பனம் என்றால் அழிவு. கல்பனம் என்றால் பிறப்பிறப்பு. அதுவே கல்பம் என்று ஆகியது. ஒரு கல்பம் பிரம்மலோகத்தின் ஒரு யுகம். ஆயிரம் மகாயுகம் சேர்ந்தது ஒரு கல்பம். ஒவ்வொரு மகாயுகமும் நாற்பத்து மூன்று லட்சம் வருடங்களடங்கியது. கிருத யுகம் இரண்டரை மகாயுகம். த்ரேதா யுகம் பத்தில் மூன்று மகாயுகம். துவாபரயுகம் ஐந்தில் ஒரு மகாயுகம். கலியுகம் பத்தில் ஒரு மகாயுகம் என்கிறது ஆதித்ய புராணம்.”