“அன்னமய கோசத்தின் உள்ளே பிராண, அசுத்த, சுத்த, ஆனந்த, சின்மய கோசங்களைத் தாண்டி உட்சென்றால் தெரியும் சதானந்த கோசமே ஆத்மாவாகும். அது தூய பிரகாசம் கொண்டது. புலன்களின்றியே தன்னை உணர்வது. எந்த வடிவில் பிரம்மம் உள்ளதோ, அந்த வடிவமே அதற்கும். பிரம்மாண்டத்தின் ஆத்மா பிரம்மம். உடலின் பிரம்மமே ஆத்மா. அவை வேறு வேறு அல்ல. ஏழு உலகங்களும் ஏழு கோசங்களும் பிரம்மத்தையும் ஆத்மாவையம் பிரதிபலிக்கின்றன. அவை அசத் என அறிந்தவன் பிரம்மமும் ஆத்மாவுமே சத் என அறிவான். ஆத்ம தரிசனம் பிரம்ம தரிசனமேயாகும். ஆகவேதான் உபநிஷதம் அகம் பிரம்மாஸ்மி என்கிறது. பனித்துளிகள் எல்லாமே சூரியனைப் பிரதிபலிக்கின்றன. ஆத்மா பிரம்மத்தின்
...more