சிந்தனை சிதறும் தன்மை கொண்டிருக்குமெனில், அதை ஒருபோதும் குவிக்க முடியாது. குவியும் தன்மையை இயல்பாக அது அடையும்போது சிறதடிக்கவும் முடியாது. தியானம் என்பது இருபது விதமான சத்காய திருஷ்டிகளை நீக்கி மனம் முழுமையடைவது. பேதமை, செய்கை, உணர்ச்சி, அருவுருவம், வாசல் முதலிய சத்காய திருஷ்டிகள் அனைத்துமே நம் சிந்தனையை நம் இருப்பின் ஆதாரமாகக் காண்பதிலிருந்து உருவெடுப்பவை. அதை விலக்கி, வெறும் மனதை அடைந்து தூயஇருப்பு ஆவது எப்போது? காமசுகல்லானுயோகம் போகத்தை வலியுறுத்துவது. அத்தகிலமதானுயோகமோ மனதை மட்டும் அடிப்படையாகக் கொண்டது, உடலை மறுதலிப்பது. ததாகதர் இரண்டையும் இணைத்து மத்திம மார்க்கம் கண்டவர்.