தாந்த்ரிய சாஸ்திரப்படி பாரதம் மூன்று பிரிவு. விஷ்ணுகிராந்தம், ரதகிராந்தம், அஸ்வகிராந்தம் என்று அறிந்திருப்பீர்கள். விந்திய மலையை உள்ளடக்கிய இப்பகுதியே விஷ்ணு கிராந்தம். ஸித்தீஸ்வரம், காளீதந்திரம் தொடங்கி நூற்று எட்டு தாந்த்ரிக முறைகள் இங்கு உள்ளன. அதில் ஐம்பத்து ஆறாவது பிரிவு மகாகாலம். அதன் இருஉட்பிரிவுகள் ஸ்ரீபாத மார்க்கமும் அக்னி மார்க்கமும். அக்னி மார்க்கிகள் ஸ்ரீவழிபாட்டாளர்கள். பாஞ்சராத்ர ஆகமவாதிகள். அவர்களது கடைசி குரு மகாபைலரின் மரணத்திற்குப் பிறகு அக்னிதத்தனை ஏற்று, விஷ்ணுபுரத்துக் கோயிலை ஒத்துக்கொண்டார்கள். அவர்களுக்காகவே